Loading...
கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வந்த ‘பாகுபலி-2’ படத்தின் படப்பிடிப்பு ஒருவழியாக நேற்று முடிவுக்கு வந்தது. இந்நிலையில் நடிகர் பிரபாஸ் இப்படம் தொடர்பாக தனது உணர்வுகளைப் பதிவு செய்திருக்கிறார். இதுகுறித்து பிரபாஸ் ” ‘பாகுபலி’ படத்திற்காக வேலை செய்யத் தொடங்கி 5 ஆண்டுகள் முடிந்து விட்டது. படக்குழுவினர் அனைவரும் தற்போது எனது குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் ஆகிவிட்டனர்.
இந்த பிரமாண்ட படைப்பில் என்னை இணைத்த ராஜமௌலி, ஷோபு, பிரசாத் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடன் நடித்த நடிக, நடிகையர் அனைவருக்கும் இந்த தருணத்தில் எனது நன்றிகள். இத்தனை வருடங்கள் எனக்கு ஆதரவளித்து என்மீது பாசம் காட்டிய எனது ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. உங்களது அன்பு இல்லாமல் இது நடந்திருக்காது. ஜெய் மகிஷ்மதி” என்று தெரிவித்திருக்கிறார்.
Loading...
பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பாகுபலி-2’ திரைப்படம் ஏப்ரல் மாதம் 28-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
Loading...