கடந்த அரசாங்கத்தின் இறுதி காலக்கட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பாவனைக்கு உதவாத 10 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி காரணமாக ஆயிரத்து 500 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டதாக உயர்மட்ட விசாரணை ஒன்றின் தெரியவந்துள்ளது.
பங்களாதேஷ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் நிலைமையை பரிசோதிக்க வர்த்தக அமைச்சின் அதிகாரிகள் சிலர் அந்நாட்டுக்கு சென்றிருந்தாகவும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
பாவனைக்கு உதவாத இந்த அரிசியை அவ்வப்போது விலங்கு உணவாக விற்பனை செய்து முடிக்க அதிகாரிகள் முயற்சித்துள்ளனர்.
எனினும் அந்த அரிசியில் சுமார் 4 ஆயிரம் மொற்றி தொன் உணவு திணைக்களத்தின் களஞ்சியத்தில் இருப்பதாக தெரியவருகிறது.
மேற்படி அரிசியை கொள்வனவு செய்ய அரச வங்கி ஒன்றிடம் கடன் பெறப்பட்டுள்ளதுடன் அதனை இன்னும் செலுத்த முடியவில்லை.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வர்த்தக அமைச்சராக பதவி வகித்த காலத்தில் இந்த அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் தற்போதைய அரசாங்கமும் 10 ஆயிரம் மெற்றி தொன் அரிசியை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.