முஸ்லிம் மக்களின் மதராஸா பள்ளிகள் இனங்களுக்கு இடையிலான பிரிவை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் அவற்றில் தலையிடம் தயங்கமாட்டோம் என்று கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த பள்ளிகளை தடைசெய்வதுகுறித்து சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் இடம்பெற்றுவரும் நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், மதராஸா பள்ளிகள் நாட்டின் ஒற்றுமை மற்றும் அமைதிக்கு அச்சுறுத்தலான வகையில் நடத்தப்பட்டால், அவற்றை ஒழுங்குபடுத்தும் தலையீட்டை செய்ய அரசாங்கத்திற்கு உரிமை உண்டு என கூறினார்.
இதேவேளை முஸ்லிம் மக்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தற்சமயம் தென்னிலங்கை அரசியலில் பேசப்பட்டுவருகின்றமை பொருளாதார ரீதியில் இலங்கைக்கு மத்திய கிழக்கு நாடுகளின் அழுத்தங்களை உண்டுபண்ணக்கூடியது என கூறப்படுகிறது.