வயது கூடக்கூட நாம் ஆரோக்கியத்தில் கொள்ளும் அக்கறையும் கூட வேண்டும். குறிப்பாக, 35 வயதைக் கடந்தவர்கள் தமது உடல்நலத்தில் கூடுதல் கவனம் வைக்க வேண்டும் என்கிறார்கள், மருத்துவர்கள்.
பொதுவாக 35 வயது வரை உணவில் பெரிதாக கட்டுப்பாடு வைத்துக்கொள்ளத் தேவையில்லை.
ஆனால் 35 வயதை கடந்தபின் ஆண்டுக்கு ஒரு முறையாவது உடல்நலப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
அதோடு, சீரான உணவுப் பழக்கவழக்கங்களும், ஆரோக்கியமான உணவுகள், உடற்பயிற்சிகளும்தான் நோய் அண்டவிடாமல் தடுக்கும்.
முக்கியமாக, தற்போது பொதுவான நோயாகி வரும் சர்க்கரை நோய் ஏற்படாமல் தடுக்க, உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம்.
அரிசியில் உள்ள அதிகப்படியான ஸ்டார்ச், சர்க்கரை நோய் உள்ளவர்களை மிகவும் பாதிப்பதால் ஸ்டார்ச் குறைவாக உள்ள கோதுமையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
கேழ்வரகு போன்ற தானிய வகைகளையும் எடுத்துக்கொள்ளலாம். வெள்ளைச் சர்க்கரைக்குப் பதில் வெல்லம், கருப்பட்டி அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக்கொள்வது நல்லது. நெய்யை கட்டுப்பாட்டோடு பயன்படுத்த வேண்டும்.
தினமும் காலையில் எழுந்தவுடன் 2 டம்ளர் தண்ணீர் குடிப்பது, நீரிழிவு நோய் தவிர மற்ற நோய்களில் இருந்தும் நம்மைக் காப்பாற்றும்.
அத்துடன், ஊற வைத்த வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் இரண்டு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வரலாம்.
அதேபோல, வேப்பிலைக் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தாலும் ஆரம்ப நிலையில் உள்ள சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.
சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் இருந்தால், தினம் ஒரு டம்ளர் அருகம்புல் சாறு அருந்துவதும் பலன் தரும்.