யாழ்ப்பாணத்திலுள்ள நீள் சாலை ஒன்றுக்கான காப்பற் செப்பனிடும் பணிகள் தற்போது முடிவுக் கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமராட்சியையும் தென்மராட்சியையும் இணைக்கின்ற AB31 நீள் சாலைக்கான (புலோலி – கொடிகாமம் – கச்சாய் விதி) காப்பற் செப்பனிடும் பணிகளே கொடிகாமத்தில் முடிவு நிலையை அண்மித்துள்ளன.
இந்திய நிறுவனம் ஒன்றால் கடந்த 2019ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வீதிக்கான செப்பனிடும் பணிகள் படிப்படியாக நடைபெறு வந்த நிலையில் தற்போது முடிவு கட்டத்தை அடைவது மகிழ்ச்சி அளிப்பதாக வடமராட்சி மற்றும் தென்மராட்சி மக்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக வடமராட்சியிலிருந்து வெளிமாவட்டங்களுக்கான போக்குவரத்து இந்த வீதி செப்பனிடப்படுவதால் இலகுவாக்கப்படுகின்றது.
பருத்தித் துறையிலிருந்து வெளிமாவட்டங்களுக்கான பொதுப் போக்குவரத்து நடைபெற்றுவரும் நிலையில் குறித்த வீதி செப்பனிடப்படாமல் இருந்த காரணத்தால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவந்தனர்.
இதேவேளை இலங்கையில் A தரத்திலான நெடுஞச்சலைகளுக்கு அடுத்த தரத்தில் இருப்பவை AB தர நீள் சாலைகளாகும். நாட்டிலேயே யாழ் மாவட்டத்தில்தான் அதிகமான நீள் சாலைகள் காணப்படுகின்றன.