நாட்டை மீளவும் முழுமையாக முடக்குவது என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றதென பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக பண்டிகைக்காலத்தில் நாட்டை முழுமையாக முடக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், இது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோகன இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியில் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீளவும் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான முதலீட்டு மற்றும் வர்த்தக நடவக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறானதொரு நிலையில், மீண்டும் நாட்டை முடக்குவது நடைமுறைக்கு சாத்தியமற்றதாக காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆகவே, பொதுமக்கள் இந்த பண்டிகை காலப்பகுதியில் உரிய சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி, பாதுகாப்பாக செயற்பட வேண்டியது கட்டாயமானது எனவும் அவர் கூறியுள்ளார்.7Shares