உங்கள் உடல் ஆரோக்கியம் உங்களில் மன வலிமையையும், மனோ நிலையையும் பறை சாற்றும். உணவிற்கும் குணங்களுக்கும் தொடர்பு உண்டு. அதிகமான மசாலா உணவுகள் அன்றாடம் சாப்பிட்டால் காரணமேயில்லாமல் டென்ஷன், கோபம் ஆகிவற்றை உண்டாக்கும் என்பது 100 சதவீதம் உண்மை.
நீங்கள் சாப்பிடும் மசாலா உணவுகளால் உண்டாகும் பாதிப்பினை சரி செய்யும் குணங்கள் காய்கறிகள் பழங்கள் பெற்றுள்ளது. அப்படி உடலுக்கு ஆரோக்கியமான பழம் காய்களால் ஜூஸ் செய்து குடித்தால் பரிபூரண சத்துக்களை பெறலாம்.
கேரட்+ இஞ்சி + ஆப்பிள்: மூன்றையும் துருவி ஒரு டம்ளர் அளவு நீர் சேர்த்து நன்றாக மிக்ஸியில் அடித்து அதனை அப்படியே குடியுங்கள். வாரம் ஒருமுறை குடித்தால், வயிறிலுள்ள நச்சுக்களை, கிருமிகளை சுத்தப்படுத்தும்.
வெள்ளரிக்காய் + செலரி + ஆப்பிள்: இவை தலைவலி, வயிற்று வலியை குணப்படுத்தும். கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும்.
அன்னாசி +தர்பூசணி + ஆப்பிள்: இவை உடலிலுள்ள கெட்ட நீரை வெளியேற்று. சிறு நீரகத்தை சுத்தப்படுத்தும்.
பாவக்காய் +ஆப்பிள் +பால்: இந்த ஜூஸ் உடலில் உள்ள அதிகப்படியான சூட்டை தணிக்கும். வயிற்றிலுள்ள பூச்சிகளை அழிக்கும்.
கேரட் + ஆப்பிள் +பேரிக்காய்: இந்த ஜூஸ் ரத்த அழுத்ததை கட்டுப்படுத்தும். நச்சுக்களை வெளியேற்றும்.
ஆப்பிள் + அன்னாசி + பால்: இந்த ஜூஸ் மலச்சிக்கலை சரிபடுத்தும். ஜீரன சக்தியை அதிகப்படுத்தும். தேவையான சத்துக்களை அளிக்கும்.