இங்கிலாந்தில் West Sussex-ல் உள்ள Southwater பகுதியில் மர்ம நபர் ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு, மொபைல் ஃபோனை பார்த்தபடி நின்றுள்ளார்.
அப்போது, அந்த வழியே ஜாகிங் சென்ற இளம் பெண்ணை அவர் தாக்கியுள்ளார். பின்னர் வலுக்கட்டாயமாக அவரது ஆடைகளை களைத்து பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்.
செய்வதறியாது அப்பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். அப்போது அவ்வழியே சென்ற ஒருவர் அருகில் சென்றபொது, அந்த மர்ம நபர் தனது பைக்கை எடுத்துக்கொண்டு தப்பியோடிவிட்டார்.
உடனடியாக பொலிஸுக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், பொலிஸார் சம்பவம் நடந்த அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அருகில் கிடந்த ஒரு முகக்கவசத்தை பொலிஸார் கைப்பற்றினர். மேலும் குற்றவாளி குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
கடந்த ஆண்டு அக்டோபர் 27-ஆம் திகதி விடியற்காலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பின்னர், கடுமையான விசாரணை மற்றும் சோதனைகளுக்கு பிறகு பொலிஸார் குற்றவாளியை தகுந்த ஆதாரங்களுடன் கைது செய்துள்ளனர்.
அந்த நபர் Christopher Cooper (29) எனும் மரங்களை பாதுகாக்க சிகிச்சை அளிக்கும் நிபுணர் என்பதும், அவர் சம்பவம் நடந்த அன்று காலை தனது பணியை தொடங்குவதற்கு முன் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது.
சம்பவ இடத்தில் கிடந்த முகக்கவசத்தில் கிடைத்த DNA மாதிரிகளை வைத்து இவர் தான் குற்றவாளி என பொலிஸார் நிரூபித்துள்ளனர்.
இந்நிலையில், Cooper பாலியல் பலாத்கார முயற்சி மற்றும் பெண்ணை தாக்கியதற்கு தனது குற்றங்களை ஒப்புக் கொண்டார், மேலும் லூயிஸ் கிரவுன் நீதிமன்றத்தில் 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.