போவ்மன்வில் அருகில் பல வாகனங்கள் மோதல் ஏற்பட்டதால் நெடுஞ்சாலை நீளமும் மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணிக்கையான வெவ்வேறு பட்ட மோதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இவற்றில் ஒன்றில் 20 வாகனங்கள் சம்பந்தப்பட்டுள்ளன என சம்பவ இடத்திலிருந்து கிடைக்கப்பெற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.
இத்தொடர் மோதல்களில் 100-வாகனங்கள் வரை சேதமடைந்துள்ளதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸ் சார்ஜன் கெரி சிமித் தெரிவித்தார். சனிக்கிழமை பிற்பகல் 3.30மணியளவில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
கனடா சுற்று சூழல் பிரிவினரின் தகவல் பிரகாரம் லேக் ஒன்ராறியோ பனிபொழிவு காரணமாக தெளிவற்ற பார்வை மற்றும் அப்பகுதியில் குவிந்து கொண்டிருக்கும் பனி பொழிவு விபத்துக்களிற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
நெடுஞ்சாலை 401போவ்மன்வில்லிற்கும் போர்ட் ஹோப்பிற்கும் இடையில் 2 முதல் 4சென்ரி மீற்றர்கள் வரையிலான பனி பொழிவு இன்று மாலை ஏற்படுமென சுற்று சூழல் கனடா தெரிவித்துள்ளது.
நெடுஞ்சாலை எப்போது போக்குவரத்திற்கு திறக்கப்படும் என்பது தெரியாதென ஒன்ராறியோ மாகாண பொலிஸ் தெரிவிக்கின்றது.