ஜேர்மனியில் கொரோனா வைரஸ் அதிபயங்கரமாக பரவி வருவதாக பொது சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
Robert Koch நிறுவனத்தின் துணைத் தலைவரான Lars Schaade கூறும்போது, அதி பயங்கரமாக பரவக்கூடிய புதுவகை திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ்கள், கடந்த மாதத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் காணப்பட்ட முன்னேற்றத்தை தவிடுபொடியாக்கும் வகையில் அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.
நிலைமையைப் பார்த்தால், கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது எந்த அளவு கொரோனா தொற்று பயங்கரமாக இருந்ததோ, அதேபோல், ஈஸ்டர் பண்டிகையின்போதும் மிக அதிக அளவில் கொரோனா தொற்றும், உயிரிழப்புகளும், மருத்துவமனை அனுமதிப்புகளும் இருக்கும் என எதிர்பார்க்கலாம் என்கிறார் அவர்.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஜேர்மனியில் 17,482 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள், 226 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும், ஜேர்மனியில் ஒரு வாரத்தில் 100,000 பேருக்கு 96 பேர் என்ற வீதத்தில் கொரோனா தொற்று பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.