ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி பெற்ற மேலும் இரண்டு பேர் ரத்த உறைவு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் Copenhagen-ல் உள்ள பொது மருத்துவமனையில் பணியாற்றிவந்த இரண்டு ஊழியர்கள் கடந்த 14 நாட்களுக்கு முன்னர் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுள்ளனர்.
அவர்கள் இருவருக்கும் ரத்த உறைவு மற்றும் பெருமூளை இரத்தப்போக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
மேலதிக விவரங்கள் இல்லாமல், இரண்டு ‘தீவிர வழக்குகள்’ கிடைத்ததாக டேனிஷ் மருந்து நிறுவனம் உறுதிப்படுத்தியது.
அதில் ஒருவர் இறந்துவிட்டதாகவும் மற்றோருவர் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் எப்போது நோய்வாய்ப்பட்டார்கள் என்பது குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
மார்ச் 11-ஆம் திகதி அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியின் பயன்பாட்டை நிறுத்தி வைத்த டென்மார்க், இன்னும் பயன்பாட்டை மீண்டும் தொடங்கவில்லை.
கடந்த வாரத்தில் பல ஐரோப்பிய நாடுகள் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி பயன்பாட்டுக்கு தடைவிதித்த நிலையில், தடுப்பூசியின் ஆபத்துக்களை விட நன்மைகள் அதிகமாக உள்ளது என்று நம்பப்படுவதாகவும், அது பாதுகாப்பானது மற்றும் பயனளிக்கக்கூடியது என்று உறுதியாக கூறியது.
அதனைத் தொடர்ந்து ஜேர்மனி , பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் மீண்டும் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை பயன்படுத்த மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று மேலும் இரண்டு பேர் இரத்த உறைவால் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.