முன்னர் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி வழங்க மறுத்த பிரான்ஸ், தற்போது 55 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு வழங்க மறுப்பது ‘முற்றிலும் முட்டாள்தனமானது’ என்று ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தின் பேராசிரியர் சர் ஜான் பெல் தெரிவித்துள்ளார்.
நிலைப்பாட்டை மாற்றுவது முழு தடுப்பூசி திட்டத்தின் மீதான நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக பேராசிரியர் பெல் எச்சரித்தார்.
இதில் எந்த அர்த்தமும் இல்லை. இது ஒட்டுமொத்தமாக முட்டாளதனமாக தெரிகிறது. வாரம் வாரம் அவர்கள் விதிகளை மாற்றுகிறார்கள்.
உண்மையில் அவை அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி மட்டுமல்ல பொதுவாக தடுப்பூசிகள் மீதான மக்களின் நம்பிக்கையை பாதிக்கின்றன.
பிரான்ஸ் இதுவரை பயன்படுத்தப்படாத தடுப்பூசிகளை பெரியளவில் கையிருப்பில் வைத்திருக்கிறார்கள், அதே நேரத்தில் நாடு முழுவதும் புதிய மாறுபட்ட கொரோனாவின் பெரிய அலை பரவியுள்ளது. பிரான்ஸால் அதை தடுக்க முடியவில்லை.
தடுப்பூசிகளுடன் தொடர்புடைய இரத்த உறைதல் பிரச்சினைகள் இருந்தால், இருக்கிறது என்று நான் சொல்லவில்லை, ஆனால் இருந்திருந்தால், உங்களுக்கு கொரோனா வந்தால் உங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுடன் ஒப்பிடும்போது அவை மிகச் சிறிய பிரச்சினையாக தான் இருக்கும் என ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தின் பேராசிரியர் சர் ஜான் பெல் தெரிவித்துள்ளார்.