ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஜாக் டார்சி மேற்கொண்ட முதல் ட்விட்டர் பதிவு ஒன்று ரூ. 18 கோடிக்கு ஏலம் விடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியது.
மார்ச் 6, 2006 ஆம் ஆண்டு பதிவிடப்பட்ட ட்விட்டர் பதிவு என்.எப்.டி. (non-fungible token) ஆக வேல்யுபில்ஸ் எனும் தளத்தில் ஏலம் விடப்பட்டது.
ஏலத்தில் கலந்து கொண்ட பிரிட்ஜ் ஆரகிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சினா எஸ்டவி ட்விட்டர் பதிவை ஏலத்தில் வாங்கினார்.
ஏலத்தில் கிடைத்த தொகையை பிட்காயின்களாக தொண்டு நிறுவனத்திற்கு வழங்குகிறார். ஏல தொகை முழுவதும் உடனடியாக பிட்காயின்களாக மாற்றப்பட்டு நன்கொடையாக வழங்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்து.
இதுகுறித்து வேல்யுபில்ஸ் தளம் “நீங்கள் வாங்குவது ட்விட்டர் பதிவின் டிஜிட்டல் சான்றிதழ் ஆகும். இதனை கிரியேட்டர் வெரிபை மற்றும் கையொப்பம் இட்டு கொடுப்பதால், இது பிரத்யேகமானதானது என தெரிவித்துள்ளது.