சுவிட்சர்லாந்தில் கடந்த 2019ம் ஆண்டை ஒப்பிடுகையில் கடுமையான குற்றங்கள் 2020ல் 9% அளவுக்கு அதிகரித்துள்ளதாக பெடரல் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இணைய குற்றங்களையும் தற்போது கருத்தில் கொண்டு, அதையும் பதிவு செய்ய சுவிஸ் பெடரல் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
2020ல் மட்டும் அதிக எண்ணிக்கையிலான இணையவழி குற்றங்கள் நடந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, வீடு புகுந்து கொள்ளைச் சம்பவங்கள் 32,819 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 2019ஐ விட 9.9 சதவீதம் அதிகமாகும்.
இருப்பினும் 2012ல் இருந்தே படிப்படியாக வீடு புகுந்து கொள்ளைச்சம்பவங்கள் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே e-bike திருட்டு சம்பவங்கள் சுமார் 37.5% அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
நம்பிக்கை அளிக்கும் வகையில், குடும்ப வன்முறைக் குற்றங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எதுவும் இல்லை என தெரிய வந்துள்ளது.
இருப்பினும், குடும்ப வன்முறை தொடர்பில், பொலிசாருக்கு த்கவல் அளிக்கப்பட்டு, அது புகாராக பதிவானது மட்டுமே புள்ளிவிவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2020ல் கடுமையான குற்றங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கை 1668 என தெரிய வந்துள்ளது.
இது 2019ஐ ஒப்பிடுகையில் 9 சதவிகிதம் அதிகம் என பெடரல் அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2020ல் மட்டும் 47 படுகொலை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.