யாழ்ப்பாணம் சுன்னாகம் ஸ்கந்தரோஜா கல்லூரி மாணவன் கனகசுந்தரம் ஜதுர்ஷாயன் பொறியல் தொழிநூட்பவியல் பாடத்தில் தேசிய மட்டத்திலும் மாவட்ட மட்டத்திலும் முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
அதேவேளை, மானிப்பாய் இந்து கல்லூரி மாணவன் பத்மநாதன் குருபரநேசன் கலைப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தையும் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் பெற்றுள்ளார்.
2016ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்று காலை வெளியாகியிருந்தது. பெறுகளின் அடிப்படையிலேயே இரு மாணவர்களும் தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளனர்.
மேலும் யாழ்மாவட்டத்தில் கணித துறையில் முதலாம் இடத்தை யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாணவன் கஜரோகணன் கஜானன், உயிரியல் விஞ்ஞான பிரிவில் முதலாமிடத்தை வேம்படி மகளீர் உயர்தர பாடசாலையின் மாணவி ஹம்ஸா தனஞ்செஜன், வணிகப் பிரிவில் முதலாமிடத்தை சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவன் கணிஸ்லஸ் விதுசன், ஆகியோர் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை யாழ்ப்பாணம் இந்து கல்லூரியும் வேம்படி மகளீர் உயர்தர பாடசாலையும் மூன்று ஏ தர சித்திகள் பெற்றோர் எண்ணிக்கையின் அடிப்படையில் சமனாக காணப்படுகின்றன.
இதன்படி யாழ்ப்பாணம் இந்து கல்லூரியானது கணிதப்பிரிவில் மூன்று ஏ தர சித்திகளை 18 மாணவர்களும் உயிரியல் பிரிவில் மூன்று ஏ தர சித்திகளை 7 மாணவர்களும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
அதேநேரம் வேம்படி மகளீர் பாடசாலையானது உயிரியல் பிரிவில் 13 மாணவர்கள் மூன்று ஏ தர சித்தியையும், கணிதப்பிரிவில் 2ஏ தர சித்திகளையும் வணிகப்பிரிவில் 10 ஏ தர சித்திகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.