தம்மைப் போன்று அரச பணிகளில் அதிக ஈடுபாடு கொண்டவரல்ல இளவரசர் சார்லஸ் என்பதை அறிந்து பிரித்தானிய ராணியார் கவலை கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய அரச குடும்பத்தில் எவருமே, ராணியார் அளவுக்கு திறமையானவர்கள் இல்லை என அரச குடும்ப வாழ்க்கை வரலாற்றாசிரியர் கிளைவ் இர்விங் தெரிவித்துள்ளார்.
இளவரசர் சார்லசை விடவும் ராணியாருக்கு மிகவும் பிடித்தமான மகன் இளவரசர் ஆண்ட்ரூ என்றே இர்விங் சுட்டிக்காட்டுகிறார்.
அதனாலையே, இளவரசர் ஆண்ட்ரூ பல சிக்கல்களில் சிக்கிக் கொண்ட பின்னரும், அவரை மனப்பூர்வமாக மன்னித்து ஏற்றுக்கொள்கிறார் என்கிறார் இர்விங்.
இளவரசர் ஆண்ட்ரூவுக்கு நேரெதிரானவர் இளவரசர் சார்லஸ் என கூறும் இன்னொரு பிரபலம், அது அவர்களின் கடைமை உணர்வில் தெரிய வரும் என்கிறார்.
மிகவும் பக்குவமாகவும், அனைவருக்கும் பிடித்தமாகவும் இளவரசர் ஆண்ட்ரூவால் நடந்து கொள்ள முடியும் என்பது மட்டுமல்ல,
அவரது தந்தையை போல, தேவை என்றால் திமிராகவும் முரட்டுத்தனமாகவும் நடந்து கொள்ள அவரால் முடியும் என்கிறார் அவர்.
ஆனால் சார்லஸ் தொடர்பில் அப்படியான ஒரு கருத்தை இப்போதே முன்வைக்க முடியாது எனவும், அது ராணியாருக்கே தெரியும் என்றும்,
தமது மகன் தொடர்பில் உள்ளுக்குள் ராணியாருக்கு கவலை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ராணியாருக்கு பிறகு முடிசூடும் வரிசையில் இருக்கும் இருவரும், உரிய நேரத்தில் அதற்கு உகந்தாற்போல நடந்து கொள்வார்கள் என்றே நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.