Loading...
பொதுவாக நம்முடைய ஒட்டுமொத்த உடல் நலத்தைப் பொறுத்தே அதன் ஆரோக்கியமும் இருக்கிறது.
நாக்கில் கரும்புள்ளி அல்லது வழக்கத்திற்கு மாறான தோற்றம் இருப்பின் அதற்கு செரிமானக் குறைபாடு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
Loading...
மேலும் உடல் திசுக்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனை இரத்தம் கொண்டு போய் சேர்க்கவில்லை எனில் அதன் அறிகுறியாக கரும்புள்ளிகள் உருவாகும்.
எனவே அவற்றை சரி செய்ய சில வீட்டுக் குறிப்புகளை உதவி புரிகின்றது. அந்தவகையில் தற்போது அவை என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.
- வேப்பிலை இலைகள் சிலவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து காலை அந்த தண்ணீரில் வாயை கொப்பளித்து வாருங்கள். வாரத்தில் இரண்டு முறை செய்யுங்கள். கறைகள் நீங்கி சுத்தமாகும்.
- அன்னாசியில் புரோமெலைன் என்னும் வேதிப்பொருள் உள்ளது. இது நாக்கில் உள்ள கரும்புள்ளிகள், இறந்த செல்களை நீக்க உதவும். எனவே அடிக்கடி அன்னாசி பழத்தை நாக்கில் சாறுபடும்படி நன்கு மென்று சாப்பிடுங்கள்.
- கற்றாழை சதையை அரைத்து அதன் சாறை தடவி வரலாம் அல்லது ஜூஸாக குடித்து வரலாம். இதனால் கொலாஜின் அடுக்கு சீராகி புள்ளிகள் மறையும்.
- 2 இலவங்கப்பட்டை மற்றும் 4 கிராம்பு என எடுத்துக்கொண்டு தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து சூடு தணிந்ததும் வாயில் ஊற்றி கொப்ப்பளித்து துப்புங்கள். வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்யுங்கள்.
- பூண்டை தோல் உறித்து அதன் சாறு படும்படி நாக்கில் தேய்த்து வரவும். கருமை உள்ள இடங்களில் சில நிமிடங்கள் தேய்த்து வரவும். தினமும் ஒரு மாதத்திற்கு இப்படி செய்ய புள்ளிகள் மறையலாம்.
Loading...