தமிழகத்தில் சென்னையில் உள்ள தாம்பரம் அடுத்த சானிட்டோரியத்தில் 40 வருடங்களாக தோல் வியாபாரம் செய்யும் இரண்டாவது மகன் தான் சபீக் அகமது.
இவர், மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.இவருக்கு ஏற்கனவே இரு திருமணங்கள் நடந்து விவாகரத்து ஆன நிலையில், மூன்றாவதாக ஆஸ்திரேலியா குடியுரிமை வாங்கிய ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
இதனையடுத்து, சபீக்கிற்கு மனைவியுடனான அந்தரங்க உறவை வீடியோ எடுக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.
இதனிடையே, லாக்டவுனில் வீட்டிலிருந்த பொழுது கர்ப்பமாய் இருந்த தனது மூன்றாவது மனைவியின் கர்ப்பத்தை கலைத்துள்ளார்.
இதனால், அந்த பெண் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்து விட்டு தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
தாய் வீட்டிற்கு சென்ற தன் மனைவியை தன்னுடன் வந்து வாழுமாறு மிரட்டியுள்ளார் சபீக் அகமது.
மேலும், தன்னிடம் வாழ மறுத்தால் தன்னிடம் உள்ள தங்களது அந்தரங்க வீடியோக்களை இணையத்தில் பதிவிடுவேன் என மிரட்டி உள்ளார்.
அதோடு மட்டுமின்றி வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் அந்த வீடியோவை வைத்து மனைவியை மிரட்டி உள்ளார். இதனால் பயந்த அவரது மனைவி சென்னை பெருநகர காவல்ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து, அவரை கைது செய்த பொலீசார் அவருடைய செல்போனைக் கைப்பற்றி ஆராய்ந்த பொழுது செல்போனில் முதல் மற்றும் இரண்டாவது மனைவிகளின் வீடியோக்களும் இருந்துள்ளது.
மேலும், சென்னை சைபர் கிரைம் மூலமாக இவருடைய செல்போனை ஆய்வு செய்யும் பொழுது 100க்கும் மேற்பட்ட அந்தரங்க வீடியோக்களும் புகைப்படங்களும் சிக்கின.
தொடர் விசாரணையில், இவருக்கு இது ஒரு பழக்கமாகவே இருந்திருக்கிறது. இவர் முதலில் கான்பூரை சேர்ந்த பெண்ணை shaadi.com மூலம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அந்தப் பெண்ணும் பிரிந்து செல்லும் பொழுது இதேபோல் மிரட்டியுள்ளார். அவரும் கான்பூர் காவல்நிலையத்தில் சபீக் குறித்து புகார் அளித்துள்ளார்.
இரண்டாவதாக பெங்களூரைச் சேர்ந்த பெண்ணை அவரது முறைப்படி கல்யாணம் செய்து அவரிடம் இதே வேலையை காட்டியுள்ளான்.
அவரும் பிரிந்து செல்லும் பொழுது பெங்களூர் காவல் நிலையத்தில் இவரைப் பற்றி புகார் அளித்துள்ளார்.
இறுதியில் தற்பொழுது சென்னை போலீசில் சிக்கியுள்ளார். இப்பொழுது இவரை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும், இதுபோன்ற ஒரு செயலை கணவர் செய்தால் பெண்கள் தடுக்கவேண்டும் எனவும் எச்சரித்துள்ளனர்.