சிவப்பு அரிசி ஊட்டச்சத்தும் அதிக சத்தும் நிறைந்தது என்பதோடு பாரம்பரியமான உணவும் கூட.
உடல் எடையை குறைக்கும் நபர்களுக்கு, சிவப்பு அரிசி பெரும் உதவி செய்கிறது. அதில் உள்ள நார்சத்து காரணமாக, உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகள் குறையும்.
சிவப்பு அரிசி புற்றுநோய்க்கு எதிராகவும், புற்றுநோய் கிருமிகளுக்கு எதிராகவும் போராடும்.
சிவப்பு அரிசி நுரையீரலை பாதுகாக்கும் சத்துகளை உள்ளடக்கியுள்ளது. இதில் இருக்கும் மெக்னீசியம் ஆஸ்துமாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தக்கூடும். இதிலிருக்கும் செலினியம் தொற்றுநோய்கள் உடலில் அண்டாமல் பாதுகாக்க செய்கிறது.
மேலும், எலும்புகளை நன்கு வலுப்படுத்தும் தன்மையும், தசைகளை வலுப்படுத்தவும் உதவுகிறது. தலைமுடி வளர்ச்சியில் சிகப்பு அரிசி பெரும் உதவி செய்கிறது. சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்கிறது.
வெள்ளை அரிசியை சமைப்பதைவிட, சிவப்பு அரிசி அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதைக்கொண்டு சாதம் தொடங்கி தோசை, புட்டு, ரவையாக்கி உப்புமா, அடை, கொழுக்கட்டை என எத்தனையோ செய்வதற்கு வழியுண்டு.
சிவப்பு அரிசியை உணவில் சேர்த்துக்கொள்வோம். ஏனெனில், அது ஆரோக்கியத்துக்கு உத்தரவாதமான தானியம்.
சர்க்கரை நோயாளிகள், உடல் பருமன் பிரச்சனை இருக்கும் நபர்கள் சாப்பிட கூடாது. சிவப்பு அரிசியை சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.