ஹம்பாந்தோட்டை முதலீட்டு மையத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய 52 பேர் பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹம்பாந்தோட்டை நீதவான் நேற்று முன்தினம் வழங்கிய நீதிமன்ற உத்தரவை மீறிய ஏனையோரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் செயற்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் 14 நாட்களுக்கு முக்கிய சில இடங்களில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள கூடாதென நேற்று முன்தினம் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கட்டிருந்தது. இந்நிலையில், 26 பேருக்கு தனிப்பட்ட ரீதியிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த 26 பேருக்குள் நாமல் ராஜபக்சவும் உள்ளடக்கப்பட்டிருந்தார்.
அந்த நீதிமன்ற உத்தரவை கருத்திற் கொள்ளாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாமல் ராஜபக்சவை உடனடியாக கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தின் பிரபலங்கள் சிலர் பொலிஸ் அதிகாரிக்கு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.