பிரித்தானியாவின் Nottingham நகரில் உள்ள மருத்துவமனையில் அமைக்கப்பட்ட கொரோனா ஐசியூ-வில் நோயாளிகள் யாரும் இல்லாமல் வெறிச்சோடி இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக மருத்துவமனைகள் அறக்கட்டளையின் தீவிர சிகிச்சை பிரிவில் பணிபுரியும் மார்க் சிம்மண்ட்ஸ், குயின்ஸ் மருத்துவ மையத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
மருத்துவமனையின் கொரோனா ஐசியூ-வில் நோயாளிகள் யாரும் இல்லை என்று மருத்துவமனையில் உள்ள ஒரு வெள்ளை பலகை காட்டுகிறது.
கொரோனா உச்சத்திலிருந்து நேரத்தில் மூன்று கொரோனா ஐசியூ-க்கள் மருத்துவமனையில் உருவாக்கப்பட்டன என்று மார்க் சிம்மண்ட்ஸ் விளக்கினார்.
இரண்டு ஏற்கனவே மூடப்பட்டுள்ளன, 3வது ஐசியூ-வில் சிகிச்சை பெற்று வந்த கடைசி நோயாளிகள் நேற்று வெளியேறினர்.
இப்போது இந்த ஐசியூ முழுமையாக சுத்தம் செய்யப்படும், பின்னர் தற்போதுள்ள எங்கள் ஐ.சி.யூ-வின் விரிவாக்கமாக மீண்டும் திறக்கப்படும், அதே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என்று சிம்மண்ட்ஸ் கூறினார்.