வட மாகாணத்தில் நேற்றைய தினம் மேலும் 80 பேருக்கு கொவிட்-9 தொற்றுறுதியாகியுள்ளது.
அவர்களில் 66 பேர் யாழ்ப்பாணம் மாநகர மத்திய நவீன சந்தைப் பகுதியில் அடையாளம் காணப்பட்டவர்கள் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்திலும் நேற்றைய தினம் 677 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அவற்றில் 80 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய யாழ்ப்பாணம் மாநகர பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 77 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
அவர்களில் 11 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டவர்களாவர்.
இதனையடுத்து யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட சில வர்த்தக தொகுதிகளை நேற்று முதல் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன் எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.