ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இன்றுடன் இரண்டு வருடங்கள் முடிந்து விட்டது .நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாம் ஆண்டு பூர்தி நிகழ்வுகள் இன்று இடம்பெறவுள்ளன.
இதன் பிரதான நிகழ்வு காலி முகத்திடலில் இடம்பெறவுள்ளது.
இதனிடையே, நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாம் ஆண்டு பூர்த்தி நிகழ்வில் பங்கேற்க இலங்கை வந்துள்ள, இந்தியாவின் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நேற்று ஜனதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துள்ளார்.
இதன்போது இருவருக்கும் இடையில் சினேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் புதிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களைப் பாராட்டிய சந்திரபாபு நாயுடு, குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் இலங்கை அடைந்திருக்கும் முன்னேற்றத்தை பாராட்டியுள்ளார்.
இது ஆசியாவின் அனைத்து நாடுகளுக்கும் முன்னுதாரணமாக திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இன்று இடம்பெறும் ‘பேண்தகு யுகம் – மூன்றான்டு உதயம்’ பிரதான நிகழ்வில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விசேட அதிதி உரையை நிகழ்த்தவுள்ளார்.
‘அனைவருக்கும் சௌபாக்கியம்’ எனும் தலைப்பில் அவர் உரை நிகழ்த்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.