பிரித்தானியா உட்பட மற்ற நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்ய தடை விதித்ததாக பரவிய செய்திகளை இந்தியா மறுத்துள்ளது.
இரண்டாவது அலையை எதிர்கொள்வதால் இந்தியா, வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதியை தடை செய்ததாக மேற்கத்திய ஊடகங்களில் வெளியான செய்தியை அரசாங்க வட்டாரம் மறுத்துள்ளது.
உள்நாட்டு தேவைகளை கருத்தில் கொண்டு, இந்தியா தொடர்ந்து வாரங்கள் மற்றும் மாதங்கள் என வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை பல கட்டமாக வழங்கும் என்று நாங்கள் கூறியிருந்தோம்.
இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. நாங்கள் எந்த தடையும் விதிக்கவில்லை என இந்திய அரசு வட்டாரங்கள் விளக்கமளித்துள்ளன.
தடுப்பூசிகளால் உலகிற்கு உதவுவதில் இந்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்று அரசாங்க அதிகாரி கூறினார்.
எங்கள் தற்போதைய உற்பத்தி திறன் மற்றும் தேசிய தடுப்பூசி திட்டங்களின் தேவைகளைப் பொறுத்தவரை, அவ்வப்போது விநியோக அட்டவணைகளை திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் இருக்கலாம்.தேவைக்கேற்ப அட்டவணைகளை சரிசெய்ய அனைத்து பங்குதாரர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியிருக்கும். அத்தகைய ஒத்துழைப்பால் மட்டுமே, நாம் ஒற்றுமையாக தொற்றுநோயைக் எதிர்கொள்ள முடியும் என்று அதிகாரி அடிக்கோடிட்டுக் காட்டினார்.