தடுப்பூசிகளை பிரித்தானியா மற்றும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்துக்கு தடை விதிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.
அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் அடுத்தக்கட்ட தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை மீண்டும் துவங்குவதற்கு முன்னர், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வழங்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்ட தொகுப்பை முதலில் விநியோகம் செய்தங்கவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் Ursula Von Der Leyen கூறியுள்ளார்.
இல்லையெனில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தயாரிக்கப்படும் மருந்துகள் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடை செய்யப்படும் என எச்சரித்துள்ளார்.
இது, 26 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி வழங்கிவிட்டு, அவர்களுக்கு 2-வது டோஸை வழங்க திட்டமிட்டுள்ள பிரித்தானியாவுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
பிரித்தானியாவுக்கு தடுப்பூசி ஏற்றுமதியை தடை செய்வது என்பது, ஐரோப்பிய ஒன்றியம் தங்களுக்கே பாதிப்பை ஏற்படுத்துக்கொள்ளும் ஒரு முடிவாகும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்த போதிலும், Von Der Leyen இவ்வாறு கூறியுள்ளார்.