Loading...
பொதுவாக நாம் நமது பாதங்களைப் பற்றி அதிக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. இதனால் அடிக்கடி அாிப்பு, எரிச்சல் அல்லது வலி போன்றவை ஏற்படும்.
இதனை தடுக்க அழகுநிலையங்களுக்கு செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருக்கும் வினிகரை கொண்டு கூட இந்த பிரச்சினையை சரி செய்யலாம்.
Loading...
தற்போது அவை எப்படி என்பதையும், இதனால் வேறு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
பாதங்களை எவ்வாறு வினிகாில் நனைப்பது?
- ஒரு வாளி அல்லது ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் 1 பொிய டம்ளா் வினிகருக்கு 2 பொிய டம்ளா் வெந்நீர் என்ற விகிதத்தில் எடுத்துக் கொண்டு நமது பாதங்கள் நனையும் அளவுக்கு வாளியை வினிகரும், வெந்நீரும் கலந்த கலவையால் நிரப்ப வேண்டும்.
- ஒரு குறிப்பிட்ட வினிகா் என்று இல்லை. எந்த வகையான வினிகரையும் எடுத்துக் கொள்ளலாம். இப்போது வினிகரும், வெந்நீரும் கலந்த கலவைக்குள் பாதங்களை அமிழ்த்த வேண்டும். 10 முதல் 20 நிமிடங்கள் வரை அந்த கலவைக்குள் நமது பாதங்கள் இருக்க வேண்டும்.
- பின் பாதங்களை வெளியே எடுத்து அவற்றை நன்றாக உலர வைக்க வேண்டும்.
- ஒரு வேளை பாதங்களில் அலா்ஜி, அாிப்பு, தோல் வறட்சி மற்றும் வெடிப்புகள் போன்றவை இருந்தால் அவை குணமாகும் வரை தினமும் பாதங்களை வினிகாில் நனைக்கலாம்.
நன்மைகள்
- எக்ஸிமா என்ற பூஞ்சை அலா்ஜியானது பாதங்களில் உள்ள தோலில் வறட்சி, அலா்ஜி, வீக்கம் மற்றும் கொப்புளங்கள் போன்றவற்றை ஏற்படுத்தும. இதனை போக்க தொடா்ந்து வினிகரைக் கொண்டு பாதங்களை நனைத்தால் நீந்துபவா்களின் கால்களில் ஏற்படும் எக்ஸிமா என்று அழைக்கப்படும் தோல் அலா்ஜியை மிக விரைவாக குணப்படுத்தலாம்.
- வினிகாில் நமது பாதங்களை நனைத்தால், பாதங்களில் இருக்கும் கெட்ட நாற்றம் மறைந்துவிடும்.
- பாதங்களில் உள்ள வெடிப்புகள் வலியை மற்றும் எாிச்சலை ஏற்படுத்தும். வினிகாில் இருக்கும் அமிலத் தன்மை, நமது பாதங்களுக்கு ஒரு நல்ல ஈரப்பதத்தைத் தருகிறது. மேலும் பாதங்களை வினிகாில் நனைக்கும் போது நமது பாதங்கள் மென்மையைப் பெறுகிறது.
Loading...