இந்திய அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பென்ஸ்டோக்ஸை நினைத்து இந்திய ரசிகர்கள் கவலைப்படுகின்றனர்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று புனேவில் நடைபெற்றது.
இப்போட்டியில் இந்தியா அணி நிர்ணயித்த 336 ஓட்டங்களை, இங்கிலாந்து அணி 43.3 ஓவரில் எட்டி அபார வெற்றி பெற்றது.
குறிப்பாக இங்கிலாந்து அணியில் பென்ஸ்டோக்ஸ் மற்றும் ஜானி பெர்ஸ்டோவ்வின் அதிரடி ஆட்டமே இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.
இந்நிலையில், இப்போட்டியில் பென்ஸ்டோக்ஸ் 99 குவித்து ஒரு ஓட்டம் எடுக்க முடியாமல் சதம் அடிக்கும் வாய்ப்பை நூலிழையில் இழந்தார்.
அவுட் ஆகி வெளியேறும் அவர் தலையை அசைத்தபடியே சென்றார். என்ன தான் எதிர் அணியாக இருந்தாலும், இந்திய ரசிகர்கள் பலரும் பென் ஸ்டோக்ஸ் இப்படியா அவுட் ஆகனும் என்று டுவிட் பதிவிட்டு வருகின்றனர்.
ஆரம்பத்தில் 40 பந்தில் அரைசதம் அடித்த பென் ஸ்டோக்ஸ், அடுத்த 12 பந்தில் 49 ஓட்டங்கள் குவித்தார். இதில் 4 பவுண்டரி 10 சிக்ஸர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.