மினுவங்கொட, ஹொரன்பெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து காரணமாக குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
அனுமதி பத்திரமின்றி பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்து ஒன்று அதிக வேகமாக பயணித்தமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
சில பேருந்துகளுக்கு பாதுகாப்பு பிரிவுகளின் பாதுகாப்பு கிடைப்பதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த விபத்தினால் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தலுக்காக அழைத்து சென்ற பேருந்து ஒன்றினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தை தொடர்ந்து வீதிக்கு இறங்கிய மக்களால் பாரிய குழப்பநிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சம்பவ இடத்திற்கு அதிரடி படையினர் வரவழைக்கப்பட்டு நிலைமை காட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.