ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்று இன்றுடன் (ஜனவரி 8) இரண்டு வருடங்கள் பூர்த்தியாகியுள்ளதை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் பல விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாடளாவிய ரீதியில் ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, சிறைக்கைதிகள் 285 பேருக்கு இன்று விசேட மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறு குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கே இவ்வாறு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், நல்லாட்சி அரசு பதவிக்கு வந்ததும் தமிழர் தரப்பிற்கு கொடுத்த பல உறுதிமொழிகள் பல இன்றுவரை நிறைவேற்றப்படாததுடன், மீள்குடியேற்றம், தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்பு, காணாமல் போனோர் பிரச்சனை என அனைத்தும் தீர்வின்றி தொடரும் தொடர்கதைகளாக மாறியுள்ளன.