பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பொலிஸ் சேவையை களங்கப்படுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கண்டியில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பொலிஸ் சேவையை இழிவுபடுத்தியுள்ளார்.அரசியல்வாதிகளுக்கு எது தேவையோ அதனையே பூஜித் மேற்கொள்கின்றார்.
“யெஸ் சேர்”, “நோ சேர்” என அவர் அரசியல்வாதிகளின் உத்தரவினையே நிறைவேற்றி வருகின்றார்.
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற போராட்டத்தை அரசாங்கம் அடக்கிய முறை கண்டிக்கத்தக்கது என இதன்போது சுட்டிக்காட்டினார்.
மேலும், அமைதியான போராட்டத்தை கலைப்பதற்கு அரசாங்கம் குண்டர் கூட்டத்தை பயன்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி இதன்போது குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.