தற்போது இருக்கும் உலகில், இளைஞர்களிடையே மிகப் பெரிய பிரச்சனையாக இருப்பது தொப்பை தான், அதை எப்படி எல்லாம் குறைக்க முடியும் என்று போராடி வருகின்றனர்.
அதிக பொரித்து உணவு வகைகளை சாப்பிடுவது, சாப்பிட்டவுடன் தூங்குவது, ஜங் புட்ஸ் போன்றவை இந்த தொப்பைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இதற்காக ஜிம்மிற்கு செல்வது, காலையில் எழுந்தவுடன் வாக்கிங் செல்வது போன்ற பல உடற்பயிற்சிகள் உண்டு.
ஆனால், இப்போது கரித்தூள் ஜுஸ் மூலம் தொப்பையை குறைக்க முடியும் என்பது தெரியவந்துள்ளது. அதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- செயலாக்கப்பட்ட கரித்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- லெமன் ஜூஸ் – 1 டேபிள் ஸ்பூன்
- தேன் – 1 டீஸ்பூன்
- வெதுவெதுப்பான நீர் – 1 டம்ளர்
செய்முறை
ஒரு கிளாஸ் டம்ளர் வெதுவெதுப்பான நீரில் செயலாக்கப்பட்ட கரித்தூள், தேன் மற்றும் லெமன் ஜூஸை தேவையான அளவு கலந்து கொள்ளவும்.
அதன் பின் இவை அனைத்தையும் நன்றாக கலக்க வேண்டும். நன்றாக கலந்த பின் இந்த ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
இந்த முறையை தினமும் செய்தால் கண்டிப்பாக தொப்பையை குறைத்து விடலாம். கரித்தூள் பொதுவாக கூந்தல், சருமம் மற்றும் பற்கள் பராமரிப்பிற்கு பயன் தருவது குறிப்பிடத்தக்கது.