இந்திய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி புனேவில் இன்று பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது.
அதன் படி முதலில் ஆடிய இந்திய அணி 48.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ஓட்டங்கள் குவித்தது.
இந்திய அணி சார்பி அதிகபட்சமாக ரிஷப் பாண்ட் 74 ஓட்டங்களும், ஷிகர் தவான் 67 ஓட்டங்களும், ஹர்திக் பாண்டியா 64 ஓட்டங்களும், ரோகித் சர்மா 37 ஓட்டங்களும், ஷர்துல் தாகூர் 30 ஓட்டங்களும் அடித்தனர்.
இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.இதையடுத்து 330 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. துவக்க வீரர்கள் ஜேசன் ராய் 14 ஓட்டங்களிலும், கடந்த போட்டியில் அதிரடியாக விளையாடி சதம் அடித்த ஜானி பேர்ஸ்டோ இந்த முறை ஒரு ஒட்டத்திலும் வெளியேறினர்.இவர்கள் இருவரையும் புவனேஷ்வர் குமார் தன்னுடைய சிறப்பான பந்து வீச்சின் மூலம் வெளியேற்ற, அடுத்து வந்த பென்ஸ்டோக்ஸ்-டேவிட் மலானுடன் சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஆனால், பென்ஸ்டோக்ஸ் 35 ஓட்டங்களிலும், டேவிட் மலான் 50 ஓட்டங்களிலும் வெளியேறியதால், இந்திய அணி இனி எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதை எல்லாம் பொய் ஆக்கும் வகையில், சுட்டி குழந்தை என்று செல்லமாக அழைக்கப்படும் சாம் கரண், இந்திய அணியின் பந்து வீச்சை கடைசி கட்டத்தில் வெளுத்து வாங்கினார்.
இதனால் இங்கிலாந்து அணி, இலக்கை நெருங்கி வந்தது. கடைசி ஓவரில் 6 பந்துக்கு 14 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
இறுதி ஓவரை தமிழக வீரர் நடராஜன் அற்புதமாக வீச, இந்திய அணி இறுதியாக 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்று கைப்பற்றியுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற டெஸ்ட் மற்றும் டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.