தமிழகத்தில் திருமணமாகாத இளைஞனை திருமணமான இரண்டு பெண்கள் சேர்ந்து கழுத்தை இறுக்கி கொன்று தூக்கில் தொங்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் வந்தது.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றிய நிலையில் இறந்தவர் யார் மற்றும் அவர் தூக்கில் தொங்கியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது இறந்தவரின் பெயர் அய்யப்பன் (22) என தெரிய வந்ததோடு அவர் மரணம் தொடர்பில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
செருநல்லூர் மேலத்தெருவை சேர்ந்த அண்ணன் தம்பிகளான ஆனந்தன் மனைவி ரஜிபாணி மற்றும் அன்பரசன் மனைவி கவுதமி (26) ஆகிய இருவரும் உறவினர்கள். ரஜிபாணி, கவுதமி ஆகிய இருவரிடமும் அய்யப்பன் நீண்ட நாட்களாக தொடர்பில் இருந்தார்.
இதை அய்யப்பன் குடும்பத்தினர் கண்டித்து உள்ளனர்.
சம்பவத்தன்று இரவு மது போதையில் ரஜிபாணி வீட்டிற்கு வந்த அய்யப்பன் ரஜிபாணியுடன் தகராறில் ஈடுப்பட்டார்.
இந்த தகராறு உச்சக்கட்டம் அடைந்த நிலையில் ரஜிபாணி, கவுதமி ஆகிய இருவரும் சேர்ந்து போர்வையால் அய்யப்பனின் கழுத்தை இறுக்கியுள்ளனர்.
இதில் மயங்கிய நிலையில் இருந்த அய்யப்பனை ரஜிபாணி வீட்டின் பின்புறம் உள்ள கருவேலமரத்தில் ரஜிபாணி, கவுதமி ஆகிய இருவரும் சேர்ந்து தூக்கு மாட்டி தொங்கவிட்டது தெரியவந்துள்ளது.
இதை தொடர்ந்து பொலிசார் கொலையாளிகளான ரஜிபாணி மற்றும் கவுதமியை கைது செய்துள்ளனர்.