தமிழகத்தின் கடலூர் அருகே கள்ளக்காதல் ஜோடி உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த இரண்டறை வயது குழந்தையைக் கொன்று தண்ணீர் தொட்டிக்குள் வீசியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மஞ்சக்குப்பம் புவனேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் முகமது அலி, இவர் தள்ளுவண்டியில் நூடுல்ஸ் வியாபாரம் செய்து வருகிறார்.
சமீபத்தில், இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அஷா என்பவருக்கும் திருமணம் முடிந்து இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 4 மாதங்களுக்கு முனர் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
இதைத் தொடர்ந்து, முகமது அலி வேலூரைச் சேர்ந்த சகீலா பானு என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார், குழந்தை முகமது அலியிடம் வளார்ந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 3 ஆம் திகதி குழந்தை காணாமல் போயுள்ளது. முகமது அலியும், உறவினர்களூம் பல இடங்களில் தேடியுள்ளனர்.
அப்போது முகமது அலி வீட்டின் தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை சடமாக மீட்கப்பட்டுள்ளது.
இதையறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனையில், குழந்தை கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, பொலிசார் குழந்தை சகிலா பானுவுடன் இருந்தபோதுதான் கொல்லப்பட்டது என தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, சகிலா பானு கூறிய வாக்குமூலம் அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது.
பொலிசார் விசாரணையில், சகிலா பானுவுக்கும் பூவராக மூர்த்திக்கும் கடந்த 2 மாதங்களாக கள்ளக்காதல் இருந்துள்ளது. முகமது அலி வியாபாரத்துக்கு வெளியே சென்ற பிறகு இருவரும் வீட்டில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 3 ஆம் திகதி கடந்த 3ஆம் தேதி சகிலா பானு வீட்டிற்கு சென்ற பூவராக மூர்த்தி அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது குழந்தை ஆஷா சத்தம்போ ட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த பூவராக மூர்த்தி குழந்தை ஆஷாவை கழுத்தை நெரித்து கொன்று யாருக்கும் தெரியக் கூடாது என்பதற்காக இருவரும் சேர்ந்து குழந்தையை தண்ணீர் தொட்டிக்குள் வீசியுள்ளனர்.
இதனை வாக்குமூலமாகவும் பூவராகமூர்த்தி பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.