இந்த ஆண்டு இரண்டாவது முறையாக லண்டனில் கோவிட் – 19 மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பிரித்தானிய பொது சுகாதார தரவுகளின் படி மார்ச் 28 ஆம் திகதி லண்டனில் கோவிட் – 19 உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் இறுதியாக கடந்த மாதம் 27ம் திகதி கோவிட் – 19 மரணங்கள் பூஜ்ஜியமாக பதிவாகியிருந்தது.
இந்நிலையில், தற்போது இந்த ஆண்டு இரண்டாவது முறையாக கோவிட் – 19 மரணங்கள் எதுவும் லண்டனில் பதிவாகவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் – 19 தொற்றின் தாக்கம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உச்சத்தில் இருந்தது. இதனால் நாளாந்தம் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 230 ஆக இருந்தது.
எனினும் பின்நாளில் இந்த எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் திகதி கோவிட் – 19 மரணங்கள் எவையும் பதிவாகியிருக்கவில்லை.
இந்நிலையில், உருமாறிய கோவிட் – 19 தொற்று காரணமாக லண்டன் நகரில் மீண்டும் கோவிட் – 19 பரவல் வேகமெடுத்த நிலையில், தடுப்பூசி திட்டத்தினால் பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது.
இதன்படி, கடந்த மாதம் 27ம் திகதி லண்டனில் நகரில் கோவிட் மரணங்கள் பதிவாகியிருக்கவில்லை. அதேபோல் நேற்றைய தினமும் கோவிட் – 19 எதுவும் மரணங்கள் பதிவாகியிருக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன் நகரில் 7,08,000 பேர் கோவிட் – 19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 18 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரித்தானியாவில் அதிக உயிரிழப்பை சந்தித்த 3வது நகரம் லண்டன் என்பது குறிப்பிடத்தக்கது.