பட்டுப்பாதை மற்றும் சாலை ஒத்துழைப்பை மேம்படுத்தவும், தொற்றுநோய்க்கு பின்னர் இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு பங்களிக்கவும் சீன ஜனாதிபதி தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இன்று நடத்திய ஒரு தொலைபேசி கலந்ததுரையாடலின் போது இந்த விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கு சீனா தொடர்ந்து தேவையான உதவிகளை வழங்கும். விமான போக்குவரத்து மற்றும் கல்வி உள்ளிட்ட பகுதிகளில் ஒத்துழைப்பை தொடரும்.
அதேநேரம் பிற ஒத்துழைப்புகள் குறித்தும் ஆராயப்படும் என்றும் சீன ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் சீனாவின் சட்டபூர்வமான இடத்தை மீட்டெடுப்பதற்கான இலங்கையின் ஆதரவை சீனா ஒருபோதும் மறக்காது.
இந்தநிலையில் பரஸ்பர அக்கறை தொடர்பான பிரச்சனைகளில் ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பதற்கும், ஒருவருக்கொருவர் நியாயமான உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இலங்கையுடன் தொடர்ந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ஜின்பிங் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அதன் மக்களுக்கு பயனளிக்கும் வகையில், வறுமை குறைப்பு, கிராமப்புற புத்துயிர் பெறுதலில் சீனாவின் அனுபவத்திலிருந்து இலங்கை கற்றுக்கொள்ள விரும்புகிறது என்று இதன்போது ஜனாதிபதி கோட்டாபய குறிப்பிட்டுள்ளார்.