இல்-து-பிரான்சில் கொரோனாத் தொற்று வீதமானது, 100.000 பேரிற்கு 641 இனைத் தாண்டி உள்ளது. இல்-து-பிரான்சில்கொரேனாத் தொற்று விகதம் 790 இனைத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. வைத்தியசாலைகளில்பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
பிரான்சில் வைத்தியசாலைகளில் மட்டும் 360பேர் கடந்த 24 மணி நேரத்திற்குள் (29.03.2021) சாவடைந்திருக்கும் நிலையில், இல்-து-பிரான்சில் மட்டும் 88 பேர் சாவடைந்துள்ளனர். இத்துடன் இல்-து-பிரான்சின் கொரோனாச் சாவுகள் 16.605 ஆக உயர்ந்துள்ளது.
இல்-து-பிரான்சில் 7.215 பேர் வைத்தியசாலைகளில் கொரோனாத் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீவிரசிகிச்சைப் பிரிவில் 1.484 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது இல்-து-பிரான்சின் தீவிரசிகிச்சைக் கொள்ளளவின் கொள்ளளவைத் தாண்டிய நிலையில் 130% ஆக உச்சமடைந்துள்ளது
இல்து-பிரான்சின் மாவட்டங்களில்
Paris – வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 1.520 பேர் – 3.619 பேர் சாவு (+23)
La Seine-Saint-Denis – வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 1.029 பேர் – 1.988 பேர் சாவு (+16)
Le Val-de-Marne- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 879 பேர் – 2.463பேர் சாவு (+13)
Les Hauts-de-Seine- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 1.101 பேர் – 2.252 பேர் சாவு (+7)
Les Yvelines- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 560 பேர் – 1.516 பேர் சாவு (+9)
Le Val-d’Oise- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 680 பேர் -1.615 பேர் சாவு (+9)
L’Essonne- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 560 பேர் – 1.516 பேர் சாவு (+9)
La Seine-et-Marne – வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 675பேர் – 1.620 பேர் சாவு (+7)
இல்-து-பிரான்ஸ் 29.03.2021 – 130% நிறைந்துள்ள தீவிசிகிச்சைப்பிரிவுகள்! பெரும் அழுத்தத்தில் மருத்துவமனைகள் – சாவுகள் அதிகரிப்பு!!
Loading...
Loading...
Loading...