நாட்டில் ஜனாதிபதியாக பதியேற்று மூன்றாவது வது வருடத்தை எட்டிப்பிடித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இனிவரும் காலங்களில் எவ்வாறான அரசியல் பயணத்தை முன்னெடுத்து செல்வார் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இன்றளவில் பல்வேறான கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியவராகவும் சதி திட்டங்களுக்கு விடைகொடுக்க வேண்டியவராகவும் ஜனாதிபதி காணப்படுகின்றார்.
குறிப்பாக மஹிந்தவின் சட்டைப்பைக்குள் இருந்து குதித்த சேவகன், மைத்திரிபாலவின் அரசியல் பயணம் வெற்றி நடைப்போற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்நிலையிலே அடுத்த ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றிப்பெறுவார் என்ற எண்ணமும் மக்களிடத்தில் இப்போதிலிருந்தே தொடர ஆரம்பித்து விட்டன.
இவ்வளவு காலம் எதிரணியின் கேள்விகளுக்கு நாசுக்காக பதில் சொல்லி வந்தார் ஜனாதிபதி. குறிப்பாக மஹிந்த கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் மக்களே பதில் என்று கூறி வந்தார். காரணம் நல்லாட்சியை தேர்ந்தெடுத்தது மக்களே! என்றே பதிலளித்தார்
ஆனால் இனி வரும் காலங்களில் எவ்வாறான மஹிந்தவிற்கும் கூட்டு எதிர் கட்சியினரின் கேள்விகளுக்கும் எவ்வாறான பதில் அளிப்பார்?
காத்திருப்போம் மக்களின் கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்கும் நாள் வெகுவாக நெருங்கிக் கொண்டிருக்கின்றது.