Loading...
எல்லா பெண்களும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று தான் சருமத்தின் துளைகள் விரிவடைவது .
இது பொதுவான மேக் அப் பயன்படுத்தினாலும் சருமத்தில் திறந்திருக்கும் துளைகள் தனியாக தெரியும். இந்த துளைகளிலிருந்து வெளியேற வீட்டில் இருக்கு பொருள்களை கொண்டே வைத்தியம் செய்யலாம்.
Loading...
அப்படியான சில டிப்ஸ்களை பற்றி பார்க்க போகிறோம். இது சீக்கிரமே உங்களுக்கு பலன் அளிக்க கூடும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
- தேவையான அளவு தேன் எடுத்து முகத்தில் தடவி வட்ட இயக்கங்களில் குறிப்பாக சருமத்துளைகள் திறந்திருக்கும் இடத்தில் அதை சுற்றி மசாஜ் செய்யுங்கள். மென்மையாக மசாஜ் செய்து 15 நிமிடங்களுக்கு பிறகு மந்தமான நீரில் கழுவி விடுங்கள். பிறகு குளிர்ந்த நீரை கொண்டு துளைகளை இறுக்கி விடுங்கள். தினசரி அல்லது வாரம் மூன்று முறை இதை செய்யலாம்.
- நாட்டு சர்க்கரை உடன் தேன் மற்றும் சொட்டு எலுமிச்சை சாறு கலந்து நன்றாக சேர்த்து அதை முகத்தில் தடவி முகத்தை மென்மையாக்கி மசாஜ் செய்ய வேண்டும். அப்படி செய்து வந்தால் முகத்தில் விரிந்திருக்கும் சருமத்துளைகள் இறுக செய்யும். பிறகு மந்தமான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
- வெள்ளரிக்காய் துண்டுகளுடன் எலுமிச்சைசாறு சொட்டு சேர்த்து ப்ளெண்டரில் அரைத்து மசித்து கூழாக்கி முகத்தில் தடவி விடவும். இதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும். இது போல் வாரம் இரண்டு முறையாவது செய்து வந்தால் பலன் நிச்சயம். இதை பயன்படுத்துவதற்கு முன்பு ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து பயன்படுத்தவும்.
- முட்டை வெள்ளைக்கரு -1, ஓட்மீல் தூள் – 2 டீஸ்பூன், எலுமிச்சைசாறு – 2 சொட்டு முட்டையின் வெள்ளைகரு ஓட்ஸ் பொடி, எலுமிச்சை மூன்றையும் நன்றாக கலந்து பேஸ்ட் பதத்துக்கு குழைத்து அனைத்தையும் முகத்தில் தடவி விடவும். 30 நிமிடங்கள் கழித்து மந்தமான நீரில் கழுவி விடவும். வாரத்துக்கு இரண்டு முறை இதை செய்து வர வேண்டும். முட்டையின் வெள்ளைக்கரு சருமத்துளைகளை இறுக்க செய்யும். சருமத்தை நெகிழ்வாக்க செய்யும்.
- ஆப்பிள் சாறு வினிகர் உடன் தண்ணீர் சம அளவு சேர்த்து காட்ட பஞ்சை அதில் நனைத்து முகத்தில் தடவி விடவும். இதை இரவு நேரத்தில் முகம் கழுவி சுத்தம் செய்து பயன்படுத்தவும். பிறகு மறுநாள் காலை முகத்தை மந்தமான நீரில் கழுவி எடுத்தால் சருமத்துளைகளை சுத்தப்படுத்தி அதை இறுக்க செய்யும்.
- கற்றாழை ஜெல்லை சருமத்துளைகளின் விரிந்த பகுதியில் தடவி, சில நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும். இந்த கற்றாழை ஜெல்லை சருமத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி எடுக்கவும். இது சருமத்துளைகளை கணிசமாக குறைக்க செய்யும்.
- வாழைப்பழத்தோலை கொண்டு சருமத்தை வட்ட வடிவில் மெதுவாக இயக்கவும். 10-15 நிமிடங்கள் வரை பொறுமையாக மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவி எடுக்கவும். இது பொட்டாசியத்துடன் சேர்ந்து சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்திருக்க செய்கிறது. சருமத்துளைகளை இறுக்குகிறது.
Loading...