யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் தவறான முடிவெடுத்து மாணவியொருவர் உயிரை மாய்த்துள்ளார்.
சாவகச்சேரி இந்து கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவியின் சடலம் பிரேத பரிசோதைகளின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
காதல் விவகாரம் ஒன்றினாலேயே மாணவி உயிரை மாய்த்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தனது அவசர முடிவினால் குடும்பத்தினருக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டதாக பாடசாலையில் சக மாணவிகளிடம் அவர் கவலை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதன்பின்னரே வீட்டில் அவர் உயிரை மாய்த்தார்.
பாடசாலையில் அல்லது பிற இடங்களில் உங்கள் நண்பர்கள் விரக்தியாக, கவலையாக பேசும் சந்தர்ப்பங்களை அலட்சியப்படுத்தாமல் அது குறித்து ஆசிரியர்களிடம் அல்லது பெற்றோரிடம் தெரியப்படுத்துமாறு மாணவர்களை அறிவூட்டுவது அவசியமானது. பெற்றோரும், ஆசிரியர்களும் இதில் கவனமெடுக்க வேண்டும் என உளவியலாளர்கள் கூறுகின்றார்கள்.