சக்திவாய்ந்த என்ஜின் மற்றும் அதிநவீன வசதிகளுடன் அசத்தலான வேகத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்செல்வதை விரும்பாத இளைஞர்கள் இந்த உலகின் எந்த மூலையிலும் இருக்க முடியாது. ஆனால், இருசக்கர வாகனங்களை பொருத்தமட்டில், வேகத்துக்கு இணையான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாததால் ராட்சதத்தனமாக சீறிப்பாய்ந்து செல்லும் அதிநவீன பைக்குகள் பலருக்கு சிம்ம சொப்பனமாகவே இருந்து வந்துள்ளது.
குறிப்பாக, மிதமிஞ்சிய வேகத்தில் சென்று பிரேக் அடிக்கும்போது வழுக்கிக்கொண்டு சாலையில் சரிந்துப் பாய்வதும், குறுகிய வளைவுகளில் திரும்பும்போதும், பள்ளங்களில் விழுந்து எழும்போதும் சில வாகனங்கள் பக்கவாட்டில் சாய்ந்து, விழுந்து ஓட்டுனரை காயப்படுத்தி விடுவதுண்டு. இதனால், இறக்குமதி செய்யப்பட்ட ‘இம்போர்ட்டட் பைக்’ என்றால் சிலர் தடவிப் பார்ப்பதோடும், எட்டநின்றே வேடிக்கை பார்ப்பதோடும் தங்களது ஆவலை அடக்கிக் கொள்வதுண்டு.
இனி, இதைப்போன்றவர்களும் ஓட்டி மகிழ்வதற்கென்றே ஜப்பானை சேர்ந்த ‘ஹோண்டா’ நிறுவனம் அதிநவீன ரக மோட்டார் சைக்கிள் ஒன்றை தயாரித்து வருகிறது. தயாரிப்பு நிறைவடைந்து, இன்னும் பெயரிடப்படாமல் உள்ள இந்த மோட்டார் சைக்கிள் ’ரைடிங் அசிஸ்ட்’ என்ற அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டாண்ட் இல்லாமல் இரு சக்கரங்களில் தரையில் செங்குத்தாக நிற்கவும், சற்றும் சரிந்து, சாயாமல் தானாகவே மெதுவாக புறப்பட்டு ஓடவும் செய்கிறது.
பள்ளம் மேடுகளுக்கேற்ப தனது உடலை நீட்டி, குறுக்கிக் கொள்ளும் வசதியும் உள்ளதால் வாகனத்தில் இருந்து தூக்கியெறியப்படும் அபாயமும் மிகக்குறைவு இந்த பைக்கின் சிறப்பம்சமாகும். அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் சமீபத்தில் நடைபெற்ற புதியரக வாகன வடிவமைப்பு கண்காட்சியில் இடம்பெற்ற இந்த பைக், உரிமையாளர் முன்னால் நடந்து செல்லும்போது, தலையை இடது, வலதுபுறமாக திருப்பியவாறு, நாய்குட்டி போல அவரை பின்தொடர்ந்து செல்லும் காட்சியை கண்ட பார்வையாளர்கள் வியப்படைந்தனர்.
வாகனம் நிறுத்துமிட வசதியை தேடி நடந்துச் செல்லும் உரிமையாளர், காலியாக உள்ள இடத்தை தேர்வு செய்த பின்னர், திரும்பிவந்து பைக்கை எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இனி இருக்காது. அவரை பின்தொடர்ந்து வரும் இந்த புதியரக பைக், தான் ஓய்வெடுக்க வேண்டிய இடத்தில் பத்திரமாக நின்று இளைப்பாறலாம்.
விற்பனை ரீதியாக இந்த மோட்டார் சைக்கிள் எப்போது வெளியாகும்? என்ற ஆவலை இப்போதே கிளப்பி விட்டுள்ள ’ரைடிங் அசிஸ்ட்’டின்