சென்னையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் உள்ள மாணவர்களிடம் அனிருத் பேசியுள்ளார்.
அப்போது அனிருத் அமைக்கும் சோகப் பாடல்களுக்கான இசை எப்படி உருவாகின்றது என அனிருத் விளக்கம் அளித்துள்ளார்.
வேல்ராஜ் இயக்கத்தில், தனுஷ், அமலா பால் நடித்த விஐபி படம் பெரிய ஹிட் அடித்தது. இதன் இரண்டாம் பாகத்தை சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி வருகின்றார்.
அனிருத் பேசும் போது, என் முன்னாள் காதலியை வேறு ஆணுடன் ஒரு பாரில் பார்த்தேன். உடனே நான் வீட்டிற்கு கிளம்பி சென்றுவிட்டேன். அந்த சோகத்தில் உருவானது தான் விஐபி.,யில் வரும் ஊதுங்கடா சங்கு பாடல்.
அதே போல் எனக்கு ஒரு பெண் மீது ஈர்ப்பு இருந்தது. அவள் வெளிநாட்டிற்கு சென்றதை பார்த்த பின் உருவானது தான் ‘எனக்கென யாரும் இல்லையே’ என்ற பாடல்.
விஐபி படத்தில் ஹிட் பாடல்கள் அமைத்தும் விஐபி 2 ஏன் இசையமைக்கவில்லை என்ற கேள்விக்கு, தனுஷின் புதிய செல்லம் ஷான் ரோல்டன் இசையமைத்து வருகிறார் என கூறியுள்ளார்.