Loading...
ஆரோக்கியமான உணவுகளில் பீட்ரூட் முக்கியமான ஒன்றாகும். இது பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
பீட்ரூடில் குளோரின் இருப்பதால், இது உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை அதிகரித்து, ஒவ்வாமை பண்புகளைக் குறைத்து, பித்தப்பை, சிறுநீரகங்கள் மற்றும் நிணநீர் போன்ற உறுப்புகளை சுத்திகரிக்க உதவுகிறது.
Loading...
பீட்ரூட் சாப்பிட்டதும் சிறுநீர் சிவப்பாவது ஏன்?
பீட்ரூட்டின் சிவப்பு நிறத்திற்கு காரணம் அதிலுள்ள பீடாசையனின்கள். பீட்ரூட்டில் இருக்கும் இந்த பீட்டாசயனைன் நமது உடம்பில் உள்ள கல்லீரல் மூலம் உடைக்க முடியாமல் போகும்போது அவை சிறுநீரில் கலந்து சிவப்பாக மாறுகிறது. இதனால் சில நேரங்களில் சிறுநீர் சிவப்பாக ஏற்படுகிறது.
மேலும் இது நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கார்சினோஜன்களுக்கு எதிராக செல்களை பாதுகாக்கும் பணியைச் செய்கிறது.
பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
- பீட்ரூட் ஒரு சிறந்த நோய் அழற்சி எதிர்ப்பு காரணியாகவும் பயன்படுகிறது. மேலும் இதிலுள்ள ஒரு வகை நார் பொருட்கள், பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கிறது.
- பீட்ரூடில் உள்ள பீடானைன் நமது உடம்பின் கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது. எனவே தினமும் பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
- பீட்ரூட்டில் இருக்கும் இரும்புசத்து நமது உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகமாக்கி, மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்கிறது.
- பீட்ரூட்டில் உள்ள ஆன்டி ஆண்டியாக்ஸிடண்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, வீக்கத்திற்கு எதிராக போராட உதவுகிறது.
- பீட்ரூட் சாற்றில் அதிக அளவில் பீடைன் மற்றும் டிரிப்தோன் உள்ளது. இது நம் மனதிற்கு அமைதி அளித்து, மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
- கர்பிணிப் பெண்கள் மிதமான அளவில் சாப்பிட வேண்டும் ஏனெனில் இதில் ஃபோலேட் மற்றும் ஃபோலிக் அமிலம் அதிகமாக உள்ளது.
Loading...