அணித்தலைவர் பொறுப்பை ஏற்க சிறப்பாக தயாராகியுள்ளேன் என விராட் கோஹ்லி கூறியுள்ளார்.
ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணித்தலைவர் பொறுப்பில் இருந்து டோனி விலகியதையடுத்து, அணித்தலைவராக கோஹ்லி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, ஒரு நாள், டி20 போட்டிகளுக்கு அணித்தலைவராக இருப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.
கடந்த பல ஆண்டுகளாக இதில் டோனி மிகவும் சிறப்பாக செயல்பட்டு வந்தார். பல முக்கியமான டிராபிகளை இந்தியாவுக்காக அவர் வென்று கொடுத்துள்ளார்.
ஆனால்அணித்தலைவர் பொறுப்பு என்னை சிறந்த வீரராகவும், சிறந்த நபராகவும் உருவாக்கும். உத்திகள், ஒவ்வொரு சூழ்நிலையையும் எவ்வாறு அணுக வேண்டும் என்பது குறித்து டோனி என்னிடம் பேசினார்.
ஏனெனில் என்னை வழிநடத்துவதிலும், எனக்கு கற்றுக்கொடுப்பதிலும் உள்ள முக்கியத்துவத்தை அவர் புரிந்து கொண்டிருப்பார் என கூறியுள்ளார்.