பிரித்தானியாவில் ஏப்ரல் 12ம் திகதி முதல் முக்கிய கொரோனா கட்டுப்பாடு தளர்த்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு பிரித்தானியாவில் கொரோனா பரவ தொடங்கிய ஆரம்பத்தில் நாட்டில் உள்ள முதியோர் பராமரிப்பு இல்லங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதை கருத்தில் கொண்டு பராமரிப்பு இல்லங்களில் தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கில் ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வந்த சமீபத்திய கட்டுப்பாடுகளில், பராமரிப்பு இல்லங்களுக்குள் வெளியாட்கள் நுழைய கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
கடந்த மாதம் பராமரிப்பு இல்லங்களில் உள்ளவர்களை வெளியாட்கள் ஒருவர் மட்டும் சந்திக்கலாம் என கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது.
இந்நிலையில், ஏப்ரல் 12ம் திகதி முதல் இரண்டு பேர் சந்திக்க அனுமதி வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் ஏப்ரல் 12ம் திகதி முதல் பேரக் குழந்தைகள் தங்கள் தாயுன் சென்று பராமரிப்பு இல்லங்களில் உள்ள பாட்டியை சந்திக்கலாம்.
பராமரிப்பு இல்லங்களுக்கு வருகை தரும் பார்வையாளர்கள் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணம் அணிந்திருக்க வேண்டும் மற்றும் கொரோனா இல்லை என்ற சோதனை முடிவை வழங்க வேண்டும்.