பிரித்தானியாவில் தெருவோரத்தில் இருந்து மிகவும் ஆபத்தான கோலத்தில் மீட்கப்பட்ட மூன்று இளம் பெண்களால், அவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கான ஒப்பந்தத்தில் ஏற்பட்ட குழு என்பது தெரிய வந்துள்ளது.
குறித்த விவகாரம் தொடர்பில் காவல்துறையினர் விசாரித்ததில் அதிர்ச்சியூட்டும் விவரங்கள் வெளியாகியுள்ளன.
தெற்கு இங்கிலாந்தில் 12 முதல் 16 வயதுடைய 12 பெண்கள், ஒரு விசித்திரமான இன்ஸ்டாகிராம் அரட்டைக் குழுவில் இணைந்திருந்தது பொலிசாரால் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த இளம் பெண்கள் ஒவ்வொருவரும் தற்கொலை செய்து கொள்வதற்கான ஒப்பந்தத்தில் ஏற்பட்ட குழு என்பது தெரிய வந்துள்ளது.
மேலும், இந்த குழுவை சேர்ந்த மூவர் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில்,
அவர்கள் மூவரும் மிக மோசமான நிலையில் அதிகாரிகளால் தெருவில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையிலேயே, இவர்கள் மூவரும் கிழக்கு லண்டனின் சிங்போர்டுக்கு ரயிலில் பயணித்ததும்,
இதுபோன்ற தற்கொலை செய்து கொள்ளும் முடிவுடன் ஒப்பந்தம் செய்துள்ள குழு ஒன்று செயல்பட்டு வருவதும் பொலிசாருக்கு தெரிய வந்துள்ளது.
இதனிடையே மீட்கப்பட்ட மூவரும் அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அதில் ஒருவர் தாங்கள் முதலில் ஒன்லைனில் சந்தித்து தற்கொலை செய்து கொள்ளும் ஒப்பந்தத்தை உருவாக்கியது குறித்து பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அவர்களின் மொபைல் போன்களை கைப்பற்றிய பொலிசார் எஞ்சிய பெண்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர்.
இந்த நிலையில், 12 இளம் பெண்களில் ஏழு பேர் ஏற்கனவே பிரித்தானிய போக்குவரத்து பொலிஸால் அடையாளம் காணப்படுவதற்கு முன்பே காயம் ஏற்படுத்திக் கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும், ஐந்து படையினரைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் ஈடுபட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.