இந்திய மாநிலமான ஒடிசா சட்டப்பேரவையில் சபாநாயகரை நோக்கி பாஜக எம்.எல்.ஏக்கள் செருப்பு, பேப்பர் மற்றும் குப்பைக் கூடையை தூக்கி விசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா சட்டப்பபேரவையில் நேற்று சுரங்க ஊழல் குறித்து விவாதிக்குமாறு காங்கிரஸ் உறுப்பினர்கள் நோட்டீஸ் அளித்தித்திருந்ததினர்.
அதனை நிராகரித்த சபாநாயகர் எஸ்.என். பட்ரே, லோக் ஆயுக்தா திருத்த மசோதா விவாதமின்றி நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக எம்.எல்.ஏ ஜே .என்.மிஸ்ரா, பி.சி.சேத்தி மற்றும் மோகன் மாஜி ஆகியோர் சபாநாயகரை நோக்கி செருப்பு, குப்பைக் கூடை, மைக், பேனா, பேப்பர் ஊட்ட பொருட்களை வீசி எறிந்துள்ளனர்.
அதனையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.