திருமணம் முடிந்து மூன்றே மாதத்தில் இளம் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டி அருகே உள்ள குருவிநத்தம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் மரிய அந்தோணி ராஜ் (35). இருசக்கரங்கள் பழுதுபார்க்கும் கடை நடத்திவரும் இவருக்கும், சென்னையை சேர்ந்த வின்சென்ட் மேரி (30) என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
திருமணத்திற்கு பின்பு கணவர் வீட்டில் வசித்து வந்த வின்சென்ட் மேரி, சம்பவத்தன்று கணவருடன் வயலுக்குச் சென்றுள்ளார்.
அப்பொழுது வயலில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கணவரும், அவரது உறவினர்களும் வின்சென்ட் மேரியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பின்பு பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பின்பு, தீயணைப்பு வீரர் வந்து சடலமாக கிணற்றில் கிடந்த மேரியை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
திருமணமான மூன்று மாதத்தில் மகள் தற்கொலை செய்துகொண்டதை பார்த்து பெற்றோர்கள் கதறியழுத நிலையில், தங்களது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் கொடுத்துள்ளனர்.
பல்வேறு ஆசை மற்றும் கனவுகளுடன் திருமண வாழ்க்கையைத் தொடங்கி 3 மாதத்தில் இவ்வாறு தற்கொலை செய்துள்ளது வரதட்சணை கொடுமையா என்ற கோணத்தில் பொலிசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.