Loading...
பொதுவாக இன்றையகாலத்தில் பொடுகு பிரச்சினை அனைவரும் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்றாக மாறிவிட்டது.
அதிலும் இப்பிரச்சினையை இருந்தாலே கடுமையான எரிச்சல் என்னும் போது அது புருவங்களிலும் கண் இமைகளிலும் வந்தால் அது மேலும் கவலைப்படக்கூடிய விஷயமாக மாறிவிடும்.
Loading...
எல்லோருக்கும் இது இயல்பானதல்ல என்றாலும் அரிதாகவே இந்த பிரச்சனை உண்டாக கூடும் என்பதால் இதை ஆரம்பத்திலேயே கவனித்து இயற்கை முறையில் சிகிச்சையளிப்பது சிறந்தது.
அந்தவகையில் தற்போது இப்பிரச்சினையை எப்படி எளியமுறையில் போக்கலாம் என பார்ப்போம்.
- 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெயை சிறிது ஊற்றீ கிண்ணத்தில் வைத்து டபுள் பாய்லிங் மெத்தட் முறையில் சூடு செய்யவும். இரவு துங்குவதற்கு முன் கண் இமைகள் மற்றும் புருவங்களில் சூடான பாதாம் எண்ணெயை மசாஜ் செய்து விடவும். மறுநாள் காலை குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி எடுக்கவும். தினமும் இதை செய்துவரலாம். பொடுகு நீங்கும் வரை இதை செய்துவரலாம்.
- ஒரு டீஸ்பூன் டீ ட்ரீ ஆயில் எடுத்து கிண்ணத்தில் வைத்து டபுள் பாய்லிங் மெத்தட் முறையில் சூடு செய்து அதை புருவங்கள் கண் இமைகள் இருக்குமிடங்களில் தடவி காட்டனை நனைத்து எடுக்கவும். இலேசான பொறுக்கும் சூட்டில் இதை தடவி வந்தால் பொடுகு வெளியேறும். 10 நிமிடங்கள் கழித்து முகத்தை மந்தமான நீரில் கழுவி எடுக்கவும். நாள் ஒன்றுக்கு 3 முறையாவது இதை செய்து வந்தால் பொடுகு நீங்கும்.
- 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயை டபுள் பாய்லிங் மெத்தட் முறையில் சூடாக்கி வைக்கவும். இதை கொண்டு புருவங்கள் மற்றும் முடி இமைகளில் தடவி இலேசாக மசாஜ் செய்து விடவும். பிறகு பொறுக்கும் சூட்டில் சற்று கனமான துணியை நனைத்து அதன் மேல் வைத்து எடுக்கவும். 15 நிமிடங்களாவது ஒற்றி எடுக்கவும். தினமும் இதை செய்து வரவும்.
- 1 டீஸ்பூன் உப்புவை தண்ணீரில் கலந்து நன்றாக கலக்கி கண்களை மூடி மெலிதாக் புருவங்களில் விட்டு கைகளால் மசாஜ் செய்தபடி அந்த நீரை வெளியேற்றவேண்டும். பிறகு குளிர்ந்த நீரால் சுத்தமாக கழுவி விட வேண்டும். தொடர்ந்து இப்படி செய்து வந்தால் புருவ முடிகளில் இருக்கும் பொடுகு நீங்க கூடும்.
- வெதுவெதுப்பான இளஞ்சூட்டோடு இருக்கும் நீரில் சற்று கனமான துணியை ஊறவைத்து அதை நீரில் நனைத்து அந்த சூட்டோடு கண்கள் மற்றும் புருவத்தின் மீது பற்று வைக்கவும். தொடர்ந்து 15 நிமிடங்கள் வரை வைத்து எடுக்க வேண்டும். துணியில் சூடு குறையும் போது மீண்டும் வெந்நீரில் நனைத்து ஒத்தடம் கொடுக்க செய்யலாம்.
- பெட்ரோலியம் ஜெல்லியை சிறிதளவு எடுத்து புருவங்களிலும் மயிர்க்கால்களிலும் தடவி விடவும். இரவு முழுவதும் விட்டு மறுநாள் மந்தமான நீரில் முகத்தை கழுவி விட வேண்டும். தினமும் இரவில் இதை செய்து வருவது நல்லது. பொடுகு நீங்கும் வரை இதை செய்து வரலாம். நிச்சயம் பலன் கிடைக்கும்.
Loading...