தமிழக வீரர் ஷாருக்கானைப் அதிரடி வீரர் பொலார்டுடன் ஒப்பிட்டு ஜாம்பவான் அனில் கும்ப்ளே பாராட்டியுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஷாருக் கான், 5 முதல் தர ஆட்டங்களிலும் 25 லிஸ்ட் ஏ, 31 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பையைத் தமிழக அணி வெல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தார்.
அதிரடியான ஆட்டத்துக்குப் பெயர் பெற்ற ஷாருக் கானை, ஐபிஎல் ஏலத்தில் ரூ. 5.25 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது பஞ்சாப் அணி.
இந்நிலையில் ஷாருக்கானின் திறமை பற்றி பஞ்சாப் அணியின் தலைமைப் பயிற்சியாளரும் இந்திய அணியின் ஜாம்பவானுமான அனில் கும்ப்ளே கூறிகையில், ஷாருக்கான் பொலார்ட்டைக் கொஞ்சம் நினைவுபடுத்துகிறார்.
மும்பை அணியில் நான் இருந்தபோது வலைப்பயிற்சியில் அதிரடியாக விளையாடுவார் பொலார்ட்.
நான் பந்துவீசும்போது அவரிடம் சொல்லிவிடுவேன், பந்தை நேராக அடிக்காதே என்று. இப்போது என்னால் பந்துவீச முடியாது என கூறியுள்ளார்.